சேலம் கந்தம்பட்டியில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது


சேலம் கந்தம்பட்டியில்   அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது
x

சேலம் கந்தம்பட்டியில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

சூரமங்கலம்:

சேலத்தில் இருந்து எடப்பாடிக்கு கடந்த 19-ந் தேதி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை, பூலாம்பட்டியை சேர்ந்த ராஜா (வயது 48) ஓட்டி வந்தார். இந்த பஸ் கந்தம்பட்டி பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் பஸ் மீது கல் வீசினர். இதில் பஸ்சின் பின்புற கண்ணாடி உடைந்தது.

இந்த சம்பவம் குறித்து டிரைவர் ராஜா, சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஸ் மீது கல் வீசிய மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அரசு பஸ் மீது கல் வீசியவர் சேலம் கந்தம்பட்டி கிழக்கு காலனியை சேர்ந்த பிரவீன் (25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.


Next Story