தொழிலாளியிடம் பணம் பறித்த வாலிபர் கைது
திண்டுக்கல் பாறைமேட்டுத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45). கூலித்தொழிலாளி. இவர், பாரதிபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (30) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.200-ஐ பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டார். இதுகுறித்து சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில், திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire