வேப்பூர் அருகேதுப்பாக்கியால் சுட்டு மானை வேட்டையாடிய வாலிபர் கைதுதப்பி ஓடிய 2 பேருக்கு வலைவீச்சு


வேப்பூர் அருகேதுப்பாக்கியால் சுட்டு மானை வேட்டையாடிய வாலிபர் கைதுதப்பி ஓடிய 2 பேருக்கு வலைவீச்சு
x

வேப்பூர் அருகே துப்பாக்கியால் சுட்டு மானை வேட்டையாடிய வாலிபரை வனத்துறையினர் கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்


விருத்தாசலம்,

விருத்தாசலம் வனச்சரக அலுவலர் ரகுவரன் தலைமையில் வனவர்கள் சிவகுமார், பன்னீர்செல்வம், வனக்காப்பாளர்கள் ஆறுமுகம், நவநீதகிருஷ்ணன், ஜெயவர்த்தன் ஆகியோர் வேப்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை நிறுத்தினர். அதில், மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் திடீரென நிறுத்தினார். அதில் 2 பேர் மான் ஒன்றை அங்கு போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

வேட்டையாடிய மான்

இதில் ஒருவரை மட்டும் பிடித்து விசாரித்தனர். அதில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை எறையூர் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் மகன் யாக்கோப் (வயது 29) என்பது தெரிய வந்தது. தப்பிசென்றவர்கள் எறையூர் கிழக்கு தெருவை சேர்ந்த அந்தோணிசாமி மகன் மொட்டையான், ஜோசப் ராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து, யாக்கோபை கைது செய்த வனத்துறையினர், அவரிடம் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த நிலையில் இருந்த மான், வேட்டைக்கு பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி, துப்பாக்கி ரவை குண்டுகள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மூலம் அவர்கள் மானை வேட்டியாடி பிடித்தது தெரியவந்தது. இதில், தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோல், விருத்தாசலம் அடுத்த கோமங்கலம் அருகே முயலை வேட்டையாடி எடுத்து வந்த விருத்தாசலம் குறவர் காலனியை சேர்ந்த ராஜன் மகன் சரவணன் (20) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.


Next Story