இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வாலிபர் கைது
திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கொள்ளிடம்:
திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருமணம் நிச்சயம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கூத்தியம்பேட்டை ஊராட்சி வைரவனிருப்பு கிராமத்தை சேர்ந்த அமுதம் மகள் சுகன்யா (வயது23). இவருக்கும், அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கடந்த 1 மாதத்திற்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் கொள்ளிடம் அருகே உள்ள எருக்கூர் கிராமம் அக்ரஹார தெருவை சேர்ந்த ராஜதுரை மகன் வினோத் என்கிற லட்சுமி நாராயணன் (29) என்பவர், சுகன்யாவை கடந்த 20 நாட்களாக வெளியூர்களுக்கு அழைத்து சென்று ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலைக்கு தூண்டிய வாலிபர் கைது
இதனை சுகன்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்டித்தனர். இதனால் மனம் உடைந்த சுகன்யா வைரவனிருப்பு கிராமத்தில் உள்ள வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட சுகன்யாவை தற்கொலைக்கு தூண்டியதாக வினோத் என்கிற லட்சுமி நாராயணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.