போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை திட்டிய வாலிபர் கைது


போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை திட்டிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 15 Jan 2023 12:15 AM IST (Updated: 15 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை திட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரத்தை அடுத்த கலர் என்ற கிராமத்தில் வளவனூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள் ரோந்துப்பணியில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள மதுக்கடை அருகில் சொர்ணாவூர் கீழ்பாதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 31) என்பவர் நின்றுகொண்டு தகாத வார்த்தையால் திட்டிக்கொண்டிருந்தார். உடனே அவரை இங்கிருந்து செல்லும்படி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள் கூறினார். அதற்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் என்றுகூட பாராமல் அருளை சதீஷ்குமார் திட்டினார். இதையடுத்து சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.


Next Story