குவைத்துக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பணம் மோசடி செய்த வாலிபர் கைது


குவைத்துக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பணம் மோசடி செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

குவைத்துக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பணம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர்

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டைைய அடுத்த தில்லைவிளாகம் தெற்கு கிராமத்தை சேர்ந்த துரைசாமி மகன் முருகேசன். இவர் முத்துப்பேட்டை போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் முத்துப்பேட்டை பக்கிரிவாடி தெருவை சேர்ந்த பீர்முகமது மகன் முகமது ரபீக்(வயது32) என்பவர் குவைத் நாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி என்னிடமும் மேலும் 18 பேரிடமும் ரூ.6 லட்சத்து 34 ஆயிரம் பெற்றுக்கொண்டார். ஆனால் அவர் கூறியது படி எங்களை குவைத்துக்கு வேலைக்கு அனுப்பவில்லை. நாங்கள் கொடுத்த பணம், பாஸ்போர்ட்டையும் திருப்பி கொடுக்க வில்லை என்று ெதரிவித்திருந்தார். இது தொடர்பாக முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ரபீக்கை கைது செய்தனர்.


Next Story