சிறுமலை வனப்பகுதியில் கடமானை வேட்டையாடிய வாலிபர் கைது


சிறுமலை வனப்பகுதியில் கடமானை வேட்டையாடிய வாலிபர் கைது
x

சிறுமலை வனப்பகுதியில் கடமானை வேட்டையாடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லை அடுத்த சிறுமலை வனப்பகுதியில் கடமான் வேட்டையாடப்படுவதாக மாவட்ட வன அலுவலர் பிரபுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் வன சரகர் மதிவாணன் தலைமையில் வனவர்கள் முகமது தாஜூதீன், அப்துல் ரகுமான், சரவணகுமார் மற்றும் வனக்காப்பாளர்கள் இன்று சிறுமலை வன சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறுமலை அகஸ்தியர்புரத்தில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கிருந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார். உடனே அவரை வனத்துறை பணியாளர்கள் மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர் அ.வெள்ளோட்டை சேர்ந்த ஜான்பீட்டர் (வயது 32) என்பதும், இறைச்சிக்காக கடமானை வேட்டையாடி கொன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கி, வெடிமருந்து, அரிவாள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.



Next Story