கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி
பாளையங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் ஆச்சிமடம் விலக்கு பகுதியில் சிவந்திபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சொரிமுத்து பாண்டியன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள்.
அப்போது ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 35), உத்தமபாண்டியன்குளம் பகுதியை சேர்ந்த சுடலைமுத்து (35) ஆகிய 2 பேரும் வெவ்வேறு மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதில் இசக்கிமுத்துவை பிடித்து போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பிச் சென்ற சுடலை முத்துவை தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story