விழுப்புரம் அருகேபள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது


விழுப்புரம் அருகேபள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 July 2023 12:15 AM IST (Updated: 26 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஐ.டி.ஐ. முடித்துள்ள தரணிதரன் (25) என்பவர், அம்மாணவியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாய், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் தரணிதரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story