கஞ்சா விற்ற வாலிபர் கைது
ஆலங்குளம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
தென்காசி
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே கடங்கனேரி கிராமத்தின் அருகே காட்டுப்பகுதியில் உள்ள ஓடையில் சிலர் கஞ்சா விற்பதாக ஊத்துமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்து சென்ற போலீசாரை கண்டு வாலிபர்கள் சிலர் அங்கிருந்து ஓடினர். அப்போது அவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில், கஞ்சா விற்பனை செய்ததை அந்த வாலிபர்கள் ஒப்புக்கொண்டனர்.இதைத்தொடர்ந்து நேட்டூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் மகன் மகாராஜனை (19) கைது செய்து அவரிடம் இருந்து 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மகாராஜனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய அதே ஊரை சேர்ந்த முத்து மகன்களான சுப்புக்குட்டி (40), முப்புடாதி (35) ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story