பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது
வாணியம்பாடி அருகே பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த வெள்ளநாய்க்கனேரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அந்த ஊரில் உள்ள சுடுகாட்டு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.
இதனைக் கண்ட கிராம மக்கள் துரத்திச் சென்றபோது, 2 பேரில் ஒருவர் பிடிபட்டார். பின்னர் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் அவர் திருப்பத்தூரை அடுத்த காணமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பவுல்ராஜ் மகன் ஜூலியன் (வயது 20) எனத் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story