கோவிலில் உண்டியல் பணம் திருடிய வாலிபர் கைது
நாகர்கோவிலில் கோவிலில் உண்டியல் பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் கோவிலில் உண்டியல் பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் கோட்டார் கரியமாணிக்கபுரம் பகுதியில் கன்னி விநாயகர் கோவில் உள்ளது. இங்கு சம்பவத்தன்று இரவு ஒருவர் கதவை உடைத்து கோவிலுக்குள் நுழைந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடி சென்றார். இதுபற்றி கோவில் நிர்வாகிகள் கோட்டார் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது கோவிலுக்குள் ஒரு வாலிபர் செல்வதும், பணத்தை எடுத்து கொண்டு வெளியே தப்பி செல்வதும் போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் மயிலாடி பகுதியை சேர்ந்த மரியசேவியர் (வயது 32) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.