தாமிர கம்பிகள் திருடிய வாலிபர் கைது


தாமிர கம்பிகள் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 Sept 2022 12:15 AM IST (Updated: 21 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெய்வேலியில் தாமிர கம்பிகள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

கடலூர்

நெய்வேலி:

சேத்தியாத்தோப்பு அருகே மிராளூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜீவானந்தம் மகன் மணிகண்டன் (வயது 40). இவர் நெய்வேலி 1-வது வட்டம் பகுதியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தில் ஒரு தனியார் நிறுவன பாதுகாப்பு அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் பணியில் இருந்த போது, சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் பகுதிக்கு வந்த மர்ம நபர் தாமிர கம்பிகள் மற்றும் இரும்பு பொருட்களை திருடி கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி மணிகண்டன் நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்ததில் த ப்பி ஓடியது நெய்வேலி ஏ பிளாக் மாற்று குடியிருப்பை சேர்ந்த சர்க்கரை மகன் மணிகண்டன் (30) என்பது தெரியவந்து. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story