வியாபாரி வீட்டில் திருடிய வாலிபர் கைது


வியாபாரி வீட்டில் திருடிய வாலிபர் கைது
x

கொடைக்கானலில், வியாபாரி வீட்டில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியை சேர்ந்தவர் அசன். இவர், தனது வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 18-ந் தேதி வழக்கம்போல் அசன் தனது கடைக்கு சென்றுவிட்டார். ஆனால் வீட்டின் கதவை சாத்திவிட்டு, பூட்டுப்போட்டு பூட்டாமல் சென்று விட்டார். பின்னர் மாலையில் அசன் வீட்டிற்கு வந்தபோது, கதவு திறக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ரூ.1 லட்சம் மாயமாகி இருந்தது. இதுகுறித்து அவர் கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அசனின் வீட்டுக்குள் வாலிபர் ஒருவர் சென்றுவிட்டு, திரும்பி வருவதுபோல் காட்சி பதிவாகி இருந்தது. இதனை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், மதுரையை சேர்ந்த பொன்னுச்சாமி (வயது 21) என்ற வாலிபர் அசனின் வீட்டுக்குள் புகுந்து பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து பொன்னுச்சாமியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.30 ஆயிரம் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story