இரும்பு கம்பி திருடிய வாலிபர் கைது


இரும்பு கம்பி திருடிய வாலிபர் கைது
x

சிவகிரி அருகே இரும்பு கம்பி திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி

சிவகிரி:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வ.உ.சி. நகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் மகாராஜா பாண்டியன் (வயது 45). இவர் தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே வடுகப்பட்டி- இனாம் கோவில்பட்டி ரோட்டில் புதிதாக பள்ளி கட்டிடம் கட்டி வருகிறார். இந்த பணிக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை ராஜபாளையம் லட்சுமியாபுரத்தைச் சேர்ந்த ரவி மகன் காளைப்பாண்டி (26) என்பவர் திருடிச்சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிவகிரி போலீஸ் நிலையத்தில் மகாராஜா பாண்டியன் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் வழக்குப்பதிவு செய்து காளைப்பாண்டியை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து இரும்பு கம்பிகளும் மீட்கப்பட்டது.


Next Story