2 வீடுகளில் நகைகள் திருடிய வாலிபர் கைது


2 வீடுகளில் நகைகள் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 17 Jun 2023 12:52 AM IST (Updated: 17 Jun 2023 4:21 PM IST)
t-max-icont-min-icon

2 வீடுகளில் நகைகள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

மண்ணச்சநல்லூர், நொச்சியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளில் நகை-பணம், கால்நடைகள் அடிக்கடி திருட்டு போயின. திருட்டு ஆசாமிகளை பிடிக்க மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனரஇந்நிலையில், நேற்று திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த நொச்சியம் அருகே உள்ள ரெட்டை மண்டபம் பகுதியில் நொச்சியம் மான்பிடிமங்கலம் அரிசன தெருவைச்சேர்ந்த ரஞ்சித் (வயது 32) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு மான்பிடிமங்கலம் அச்சுதன் என்பவர் வீட்டில் 6½ பவுன் நகையும், அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் வீட்டில் 3¾ பவுன் நகையை திருடியது தெரிய வந்தது.


Next Story