அரசு ஆஸ்பத்திரியில் பணம் திருடிய வாலிபர் கைது
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி
நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மகப்பேறு சிகிச்சை பிரிவில் வீரகேரளம்புதூரை சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று அந்த பெண்ணின் பணப்பையை வாலிபர் ஒருவர் திருடி செல்ல முயன்றார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் அவர் தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரை சேர்ந்த அசன் தவுபிக் (வயது 19) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story