மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
x

மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

ஆம்பூர்

மோட்டார்சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆம்பூரை அடுத்த காமியம்பட்டு புதூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 52). இவரது மோட்டார் சைக்கிளை சில தினங்களுக்கு மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இது குறித்து புகாரின்பேரில் ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீசார் நேற்று முன்தினம் கம்மியம்பட்டு புதூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்ேபாது அவ்வழியாக வந்த ஒரு மோட்டார்சைக்கிளை நிறுத்தி அதனை ஓட்டி வந்தவரிடம் விசாரித்தனர். அதில் அந்த நபர் நாச்சியார்குப்பம் பகுதியை சேர்ந்த ரூபதி (வயது 21) என்பதும், சில தினங்களுக்கு முன்பு காணாமல் போன பார்த்திபனின் மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது.

இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story