நாகர்கோவிலில் பெண் போலீசை மிரட்டிய வாலிபர் கைது


நாகர்கோவிலில் பெண் போலீசை மிரட்டிய வாலிபர் கைது
x

நாகர்கோவிலில் பெண் போலீசை மிரட்டிய வாலிபர் கைது ெசய்யப்பட்டார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

கடலூர் மாவட்டம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 27). இவருடைய மனைவி தேவி (22). இவர்கள் தற்போது நாகர்கோவில் வடிவீஸ்வரம் தோப்பு வணிகர் தெருவில் வசித்து வருகின்றனர். கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் தேவி புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடந்தது. அப்போது போலீஸ் நிலையம் முன் சதீஷ், மனைவி தேவியின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கினார். அப்போது அங்கு இருந்த பெண் போலீஸ் ரோஸ்பின் ஜெபராணி அதை தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடந்த சதீஷ், பெண் போலீசை தகாத வார்த்தையால் பேசினார். அதோடு அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததோடு, கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து ரோஸ்பின் ஜெபராணி வடசேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீசை கைது செய்தனர்.


Next Story