கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
அம்பையில் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி
அம்பை:
நெல்லை மாவட்டம் அம்பை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 40). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த உய்யகொண்டான் மந்திரி (29) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. அதன் காரணமாக அம்பை போலீஸ்நிலையத்தில் புகார் வழக்கு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சுப்பிரமணியபுரம் கருப்பசாமி கோவில் அருகே செல்வம் வேலைக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு நின்ற உய்யகொண்டான் மந்திரி, அவரை வழிமறித்து நீ எப்படி என் மீது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் எனக்கூறி அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அம்பை போலீசில் செல்வம் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் விசாரணை நடத்தி உய்யகொண்டான் மந்திரியை நேற்று கைது செய்தார்.
Related Tags :
Next Story