வடசேரி பஸ் நிலையம் அருகே ஆட்டோ டிரைவரிடம் பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது
வடசேரி பஸ் நிலையம் அருகே ஆட்டோ டிரைவரிடம் பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி
நாகர்கோவில்:
நாகர்கோவில் கீழ புத்தேரி சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 26), ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் வடசேரி பஸ் நிலையம் அருகே ஆட்டோவுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வடசேரி மாடன்கோவில் தெருவை சேர்ந்த ஜெம்ஸ் (32), விக்னேசிடம் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து பணம் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் விக்னேஷ் சத்தமிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். இதனால் ஜெம்ஸ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து விக்னேஷ் வடசேரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ஜெம்சை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story