பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது


பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற  வாலிபர் கைது
x

லத்தேரி அருகே பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

கே.வி.குப்பம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 45 வயது பெண். இவருக்குத் திருமணம் ஆகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் தனது மாடுகளை அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு ஓட்டிச்சென்று மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த செஞ்சி ஊராட்சி, வெங்கடகிரி சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கதிரவன் (வயது 21) என்பவர், மாடு மேய்த்துக் கொண்டு இருந்த பெண் அருகில் சென்று அவரை தனது ஆசைக்கு இணங்கும்படி கூறி உள்ளார். இதற்கு அந்த பெண் மறுத்துள்ளார்.

உடனே அவர் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த கதிரவன், அங்கிருந்த கற்களால் அந்த பெண்ணைத் தாக்கிவிட்டு, தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்து மயங்கிக் கிடந்த அந்த பெண்ணை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பெண்ணின் கணவர் பனமடங்கி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கதிரவனை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story