குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கீழத்தூவல் அருகே உள்ள கள்ளியடியேந்தல் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் கீர்த்திவாசன் (வயது 20). கொடுக்கல், வாங்கல் பிரச்சினை காரணமாக இவரை முதுகுளத்தூர் கிழக்கு தெருவை சேர்ந்த சிவன்குமார் மகன் அபினேஷ் (19) என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து காரில் விரட்டி சென்றார். அப்போது கார் மோதி தூக்கி வீசப்பட்டதில் கீர்த்திவாசன் மின்கம்பத்தில் மோதி பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக கீழத்தூவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபினேஷ் உள்ளிட்டோரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் கைதாகி உள்ள அபினேஷ் மீது கீழத்தூவல், தேரிருவேலி, முதுகுளத்தூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் 6 குற்ற வழக்குகள் உள்ளன. தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வரும் அபினேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை பரிந்துரை செய்தார். இதனையேற்று மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் அபினேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.