குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x

கும்பகோணம் அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா நாச்சியார்கோவில் கம்மாளர் தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் ஜெகன் என்ற தமிழரசன் (வயது 30). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் தமிழரசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், கலெக்டர் தீபக்ஜேக்கப்பிற்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐஸ்வர்யா, குண்டர் சட்டத்தில் தமிழரசனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.


Next Story