குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x

திருத்துறைப்பூண்டி அருகே குண்டர் சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணலி மேலவெளி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் அஜித் என்கிற ரஞ்சித் குமார்(வயது 25). இவர் மீது போலீஸ் நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. மீண்டும் இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதால் ரஞ்சித்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் ரஞ்சித்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார், ரஞ்சித்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story