குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டனர்

மதுரை

பேரையூர்,

பேரையூர் தாலுகா அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் பார்த்திபன் என்ற பென்னி (வயது 26). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலியல் பலாத்கார வழக்கில் சாப்டூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் மீது வழக்குகள் உள்ளன. இதனால் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத், பென்னியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டரிடம் பரிந்துரைத்தார். அதை ஏற்ற கலெக்டர் சங்கீதா, பென்னியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதனடிப்படையில் பென்னி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story