போக்சோ வழக்கில் வாலிபர் கைது
கயத்தாறு அருகே போக்சோ வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள அய்யனார் ஊத்து கிராமம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த விவசாயி முத்துப்பாண்டி என்பவருடைய மகன் செல்வ முருகன் (வயது 25). கருப்பட்டி வியாபாரம் செய்து வரும் இவர் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கயத்தாறு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி விசாரணை நடத்தினார். பின்னர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து செல்வ முருகனை கைது செய்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire