நாகர்கோவிலில்பள்ளி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த வாலிபர் கைது
பள்ளி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த வாலிபர் கைது
கன்னியாகுமரி
நாகர்கோவில்:
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராம் (வயது 26). இவருக்கு, நாகர்கோவில் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் 17 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் ஜெயராம், மாணவியை காதலிப்பதாக கூறினார். ஆனால் வாலிபரின் காதலை மாணவி ஏற்கவில்லை.
இதனால் மாணவியை பின்தொடர்ந்து தன்னை காதலிக்கும்படி தொந்தரவு செய்து வந்தார். இந்த நிலையில் வாலிபர், மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டியதாக தெரிகிறது. இதனால் பயந்துபோன மாணவி இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறி அழுதார். அதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்போில் ஜெயராமை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.
Related Tags :
Next Story