குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x

சேரன்மாதேவியில் குண்டர் சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பெருமாள் சுப்பிரமணியன் என்ற பாட்ஷா (வயது 20). இவர் தொடர்ந்து அடிதடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட கலெக்டர் விஷ்ணு இதனை ஏற்று, பெருமாள் சுப்பிரமணியன் என்ற பாட்ஷாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி அவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story