ரெயில் தண்டவாளம் அருகே வாலிபர் பிணம்


ரெயில் தண்டவாளம் அருகே  வாலிபர் பிணம்
x

பூதலூரில் ரெயில் தண்டவாளம் அருகே பிணமாக கிடந்த வாலிபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

பூதலூரில் ரெயில் தண்டவாளம் அருகே பிணமாக கிடந்த வாலிபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் பிணம்

தஞ்சையை அடுத்த பூதலூர் ரெயில் நிலையம் அருகே ரெயில் தண்டவாளப் பகுதியில் 35 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தஞ்சை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவவடிவேலு, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேலன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார், ஏட்டு சுரேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என உடனடியாக விவரம் தெரியவில்லை. இதையடுத்து அந்த வாலிபரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

மேலும் இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரித்தபோது, இறந்தவருடைய சட்டைப்பையில் திருச்சியில் இருந்து மயிலாடுதுறை செல்வதற்கான ரெயில் டிக்கெட் இருந்ததும், ஊதா நிற கட்டம் போட்ட முழுக்கை சட்டை, பிரவுன் கலர் முண்டா பனியன், பழுப்பு நிற கட்டம் போட்ட கைலி அணிந்திருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எனவும், ரெயிலில் பயணம் செய்தபோது படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? எனவும் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story