வேலை வாய்ப்புக்கான பயிற்சியில் இளைஞர்கள் சேரலாம்


வேலை வாய்ப்புக்கான பயிற்சியில் இளைஞர்கள் சேரலாம்
x
தினத்தந்தி 4 Jan 2023 12:50 AM IST (Updated: 4 Jan 2023 12:33 PM IST)
t-max-icont-min-icon

வேலை வாய்ப்புக்கான பயிற்சியில் இளைஞர்கள் சேரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர்:

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் கீழ் திறன் பயிற்சி மையத்தின் மூலம் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்கக்கூடிய பயிற்சி அளிக்கும் வகையில், அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் திறன் பயிற்சி திட்டத்தின் மூலம் குறுகிய கால பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில் எலெக்ட்ரீசியன் டொமஸ்டிக் (வீட்டு உபயோக மின்சாதனங்கள்) தொழிற்பிரிவுக்கான பயிற்சிக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். ஆர்க் மற்றும் கியாஸ் வெல்டிங் தொழிற்பிரிவுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். இதற்கு 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். இந்த பயிற்சியில் சேர விரும்பும் பயிற்சியாளர்களுக்கு போக்குவரத்து படி வழங்கப்படுகிறது. தினமும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த பயிற்சி நடைபெறும்.

பயிற்சிக்கான விண்ணப்பங்களை நேரில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் இக்குறுகிய கால பயிற்சியில் சேர விரும்புவோர் அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை தொலைப்பேசி எண் 04329-228408, செல்போன் எண்-9499055877 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story