குலசேகரன்பட்டினத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை


குலசேகரன்பட்டினத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
x

குலசேகரன்பட்டினத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் காதரியர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராசிக் அகமது மீரான். இவரது மனைவி பாத்திமா. இவர்களது மகன் ஹாசிப்கான் (வயது 24). இதில் ராசிக்அகமது மீரான் அவரது மனைவி பாத்திமாவை பிரிந்து வேறு திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இதனால் பாத்திமா அவரது அக்கா வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஹாசிப் கான் சிறுவயதிலேயே குடிபோதைக்கு அடிமையாகி பாத்திமாவின் பண்ணை வீட்டில் தனியாக வசித்துள்ளார். அவ்வப்போது கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். ஹாசிப்கான் தினமும் இரவு தாயார் பாத்திமாவை வந்து நேரில் பார்த்து விட்டு பண்ணை வீட்டுக்கு சென்று படுத்து தூங்குவது வழக்கம். கடந்த 27-ந் தேதி இரவு 8மணிக்கு தனது பாத்திமாவை பார்த்துவிட்டு ஹாசிப்கான் பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை, மதியமும் சாப்பிட வராததால் பாத்திமா பண்ணை வீட்டிற்கு மகனை தேடிச்சென்றுள்ளார். வீட்டிலுள்ள பனைமர உத்திரத்தில் நைலான் கயிற்றில் ஹாசிப்கான் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர் கொடுத்த தகவலின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் சம்பவ வீட்டுக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story