தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்
அருப்புக்கோட்டை
கமுதி அருகே அபிராமத்தை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் அருண்குமார் (வயது 27). இவர் அதே ஊரை சேர்ந்த குணசுந்தரி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியில் தனது மனைவியுடன் தங்கி வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி குணசுந்தரி பல்பொருள் அங்காடியில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அருண்குமார் போன் செய்தபோது குணசுந்தரி போனை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கோபத்தில் இருந்த அருண்குமார் மனைவி வீட்டுக்கு வந்தவுடன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அருண்குமார் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அருண்குமாரின் தந்தை பாண்டி கொடுத்த புகாரின் பேரில் தாலுகா நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.