தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்
சிவகாசி,
சாத்தூர் அருகே உள்ள படந்தால் தென்றல்நகரை சேர்ந்தவர் கணேசன் மகன் பாலமகாராஜா (வயது 23). லாரி கிளீனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக பாலமகாராஜா அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண் கடந்த சில நாட்களாக பாலமகாராஜாவிடம் பேசவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனவருத்தம் அடைந்த அவர் சம்பவத்தன்று இரவு வீட்டின் வெளியே உள்ள தகரசெட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கணேசன் சாத்தூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story