தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
வெள்ளியணை அருகே உள்ள ஜெகதாபி கும்மாயம்பட்டியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 36). இவர் கரூரிலுள்ள ஒரு தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதற்கிடையில் மதுபோதைக்கு அடிமையான மதியழகன் கடந்த சில ஆண்டுகளாக வயிற்றுவலியால் அவதி அடைந்து வந்தார். இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் உடல்நிலை சரியாகவில்லை.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட மதியழகன் வேப்பமரத்தில் தூக்கில் தொங்கினார். இதையடுத்து அவரது உறவினர்கள் மதியழகனை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மதியழகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை குறித்த புகாரின்பேரில், வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.