தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை யாதவர் தெருவை சேர்ந்தவர் பிச்சையா மகன் சதீஷ்குமார் (வயது 33). இவர் லேப் டெக்னீசியன் படித்துவிட்டு தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் எக்ஸ்ரே டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சில நாட்களாக இவர் மது குடித்து விட்டு பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தார். இந்நிலையில், நேற்று சதீஷ்குமார் அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சதீஷ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story