தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே பாலவனநத்ததை சேர்ந்தவர் சங்கிலி. இவரது மகன் அய்யப்பன் (வயது 19). இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்ததாகவும், இதனை சங்கிலி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அய்யப்பன் அவரது வீட்டின் மாடியில் உள்ள அறையில் படுக்க சென்றார். வெகு நேரமாகியும் வராததால் அவரது குடும்பத்தார் மாடியில் சென்று பார்த்த போது அவர் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அய்யப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story