தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
சிவகாசியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்
சிவகாசி,
சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்தவர் நாகேந்திரன் மகன் முனீஸ்வரன் (வயது 29). இவருக்கு குடிபழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் இவரால் சரியான முறையில் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று அண்ணாநகரில் உள்ள தனது தாய்வீட்டிற்கு சென்றார். அப்போது முனீஸ்வரன் அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மனைவி யோகலட்சுமி சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story