தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

அரிமளம் ஒன்றியம் ஏம்பல் போலீஸ் சரகத்திற்குட்பட்ட போர்க்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மகன் ஜான் (வயது 19). இவர் மனவளர்ச்சி குன்றியும், உடல் ஊனமுற்றவராகவும் இருந்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையில் ஜான் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய தாயார் நிர்மலா சத்தம் போட்டு உள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஜான் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஏம்பல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story