தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

தாயில்பட்டி,

செவல்பட்டி ஊராட்சி கொட்டமடக்கிபட்டி சர்ச் தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வி (வயது 50). இவரது மகன் சதீஷ்குமார் (20). வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் தாமரைச்செல்வி இவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தாமரைச்செல்வி தோட்ட வேலைக்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்த போது உள் பக்கம் கதவு பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது வீட்டிற்குள் தூக்குப்போட்டு சதீஷ்குமார் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



Next Story