தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 15 Nov 2022 12:15 AM IST (Updated: 15 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேப்பூர் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

கடலூர்

வேப்பூர்

வேப்பூர் அருகே உள்ள சேவூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் குணசேகரன்(வயது 22). இவர், கடந்த 4 ஆண்டுகளாக தனது பெற்றோருடன் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் மதியம் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். வீட்டு உத்தரத்தில் குணசேகரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் வேப்பூர் போலீசார் விரைந்து சென்று குணசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குணசேகரன் தற்கொலை செய்து கொண்டற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story