தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
திண்டிவனத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை பெற்றோர் திருமணம் செய்து வைக்காததால் விரக்தி
விழுப்புரம்
திண்டிவனம்
திண்டிவனம் ரோசணை போலன் தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் சபரிகீதன் (வயது 25). இவருக்கு திருமணம் ஆகாததால் மனமுடைந்து இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் பெற்றோர் இவருக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என்ற ஆதங்கத்தில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கூரை வீட்டில் உள்ள கழியில், புடவையால் சபரிகீதன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய தகவல் அறிந்து வந்த ரோசணை போலீசார் சபரிகீதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து சபரிகீதன் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story