தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசி,
சிவகாசி தெற்குரத வீதியில் வசித்து வந்த மணிகண்டன் (வயது 30) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சாந்தினிரத்னா (27) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. மணிகண்டன் அதே பகுதியில் பெட்டி கடை நடத்தி வந்தார்.
இந்தநிலையில் கடைக்கு வந்த பெண்ணிடம் மணிகண்டன் பேசியதை அவரது மனைவி சாந்தினி ரத்னா நேரில் பார்த்து சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இருவரும் கடந்த ஒரு வாரமாக பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் சாந்தினி ரத்னா, மணிகண்டனுக்கு தகவல் கொடுக்காமல் தனது தந்தையுடன் ஜாதகம் பார்க்க சென்றுள்ளார். இதனால் மனவருத்தம் அடைந்த மணிகண்டன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சாந்தினிரத்னா அளித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.