கோத்தகிரி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை -காரணம் என்ன? போலீஸ் விசாரணை


கோத்தகிரி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை  -காரணம் என்ன? போலீஸ் விசாரணை
x

கோத்தகிரி அருகே வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கூலித்தொழிலாளி

கோத்தகிரி அருகே உள்ள சோலூர்மட்டம், அத்தியூர்மட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் கார்த்திக் (வயது 23). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கூலித் தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

வழக்கம் போல் வீட்டில் உள்ள அனைவரும் பணிக்கு சென்றுள்ளனர். வீட்டில் கார்த்திக் மட்டும் பணிக்குச் செல்லாமல் தனியாக இருந்துள்ளார். பணி முடிந்து இரவு சுமார் 7 மணிக்கு அவரது தந்தை வீட்டிற்கு வந்தார்.

தற்கொலை

அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் கார்த்திக் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக அவர் இதுகுறித்து சோலூர் மட்டம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்த கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Next Story