முளகுமூட்டில் இளைஞர் காங்கிரசார் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்


முளகுமூட்டில் இளைஞர் காங்கிரசார் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
x

முளகுமூட்டில் இளைஞர் காங்கிரசார் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி

தக்கலை,

முளகுமூட்டில் இளைஞர் காங்கிரசார் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினர்.

இளைஞர் காங்கிரசார் போராட்டம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி.பதவியை தகுதிநீக்கம் செய்ததை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் முளகுமூட்டில் நேற்று இரவு தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடந்தது. இதற்கு இளைஞர் காங்கிரஸ் அகிலஇந்திய ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் தலைமை தாங்கினார், முளகுமூடு ராஜீவ் காந்தி சிலை அருகிலிருந்து தொடங்கிய தீப்பந்த ஊர்வலத்தை விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்து கலந்து கொண்டார். இதில் பெண்கள், இளைஞர் என ஏராளமானோர் கலந்து கொண்டு தீப்பந்தத்தை ஏந்தியவாறு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக அழகிய மண்டபம் வந்தடைந்தனர்.

பின்னர் அங்கு கண்டன கோஷம் போட்டனர். இந்த போராட்டத்தில் குமரி மேற்கு மாவட்ட பொருளாளர் ஐ.ஜி.பி.லாரன்ஸ், பத்மநாபபுரம் தொகுதி தலைவர் சக்திவேல், குமரி கிழக்கு மாவட்ட தலைவர் டைசன், கண்ணனூர் ஊராட்சி கமிட்டி தலைவர் ஜாண், குளச்சல் சட்டமன்ற தொகுதி தலைவர் ஜேக்கப், காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் வக்கீல் ஜாண் இக்னேசியஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் செலின் மேரி, மாவட்ட செயலாளர் புரோடி மில்லர், ஐ.என்.டி.யு.சி.நிர்வாகிகள் பி.டி.எஸ்.மணி, ராபர்ட், வேர்க்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜிர், திங்கள்நகர் பேரூராட்சி தலைவர் சுமன், வக்கீல் அணி மாநில பொதுச்செயலாளர் சேவியர் ராஜ், நிர்வாகிகள் விஜு மோன், கிறிஸ்டோ உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்


Next Story