திருமணத்துக்கு மறுத்த காதலியின் கழுத்தை அறுத்த வாலிபர் கைது


திருமணத்துக்கு மறுத்த காதலியின் கழுத்தை அறுத்த வாலிபர் கைது
x

கூத்தாநல்லூர் அருகே திருமணத்துக்கு மறுத்த காதலியின் கழுத்தை அறுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூர் அருகே திருமணத்துக்கு மறுத்த காதலியின் கழுத்தை அறுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

காதல்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கொட்டையூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் மதியரசன்(வயது 32). இவரும், நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த 28 வயதான ஒரு பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு அவரது பெற்றோர் வேறு வாலிபருடன் திருமண நிச்சயம் செய்தனர்.இதேபோல மதியரசனுக்கும் அவரது பெற்றோர் வேறு ஒரு பெண்ணை பார்த்து நிச்சயம் செய்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியரசனும், அவர் காதலித்த பெண்ணும் காரில் வேளாங்கண்ணிக்கு சென்றனர். அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கிய இருவரும் இரவு ஊருக்கு காரில் திரும்பினர்.

கத்தியால் அறுத்தார்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே மேலவாழச்சேரி என்ற இடத்தில் உள்ள மூங்கில்காடு பகுதியில் அவர்கள் வந்தபோது காரை நிறுத்திய மதியரசன் அந்த பெண்ணிடம், நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என கூறியுள்ளார்.ஆனால் மதியரசனின் காதலியோ திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மதியரசனுக்கும், அவரது காதலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த மதியரசன் காருக்குள் வைத்து தனது காதலியின் கழுத்தை கத்தியால் அறுத்தார். இதில் அந்த பெண்ணுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது.

கைது

பின்னர் காரை மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு ஓட்டி சென்ற மதியரசன், தனது காதலியை சிகிச்சைக்கு சேர்த்தார்.இது குறித்து தகவல் அறிந்ததும் கூத்தாநல்லூர் போலீசார் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று மதியரசனை கைது செய்தனர்.திருமணத்துக்கு மறுத்த காதலியை வாலிபர் ஒருவர் கத்தியால் அறுத்த சம்பவம் கூத்தாநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story