வாலிபர், கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா?


வாலிபர், கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா?
x

ஒரத்தநாடு அருகே ஆற்றில் தலையில் காயத்துடன் வாலிபர் உடல் மிதந்து வந்தது. அவரை கொன்று உடலை ஆற்றில் வீசி சென்றார்களா? என்பது குறித்து அவரது நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

ஒரத்தநாடு அருகே ஆற்றில் தலையில் காயத்துடன் வாலிபர் உடல் மிதந்து வந்தது. அவரை கொன்று உடலை ஆற்றில் வீசி சென்றார்களா? என்பது குறித்து அவரது நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

ஆற்றில் பிணமாக மீட்பு

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள கக்கரக்கோட்டை ராஜாமடம் கிளை ஆற்று வாய்க்காலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்த நிலையில் வாலிபர் ஒருவர் உடல் மிதந்து வந்தது.இதுகுறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆற்றில் மிதந்த வாலிபரின் உடலை மீட்டனர்.

அடையாளம் தெரிந்தது

இறந்த வாலிபரின் உடலை போலீசார் கைப்பற்றி ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக மீட்கப்பட்ட வாலிபர் தஞ்சை ஆடக்காரத்தெருவை சேர்ந்த முகமது யாஷிக்(வயது 34) என்பதும், அவரது தலையில் காயம் இருப்பதும் தெரிய வந்தது.

நண்பரிடம் விசாரணை

மேலும் இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், முகமது யாசின் கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சை கீழவஸ்தா சாவடியை சேர்ந்த நண்பர் ஒருவருடன் ஒன்றாக வெளியே புறப்பட்டு சென்ற விபரம் தெரிய வந்தது.இதனை தொடர்ந்து தொடர்புடைய அந்த நபரை போலீசார் பிடித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொன்று ஆற்றில் வீசப்பட்டாரா?

இந்த விசாரணை முடிவில் தான் முகமது யாஷிக் ஆற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவரை கொலை செய்து உடலை ஆற்றில் வீசி சென்றார்களா? என்பது பற்றிய முழு விபரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.இறந்து போன முகமது யாஷிக்கிற்கு பர்வீன் என்ற மனைவியும், ஒரு வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.


Next Story