ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு


ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
x

ஆடுதுறை அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்தாா்.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்,

ஆடுதுறை அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்தாா்.

ரெயிலில் இருந்து தவறி விழுந்தார்

ஆடுதுறை ெரயில் நிலையம் அருகில் நேற்று முன்தினம் மதியம் கோவையிலிருந்து மயிலாடுதுறை நோக்கி ஜனசதாப்தி ெரயில் வந்தது. இந்த ரெயிலில் பயணம் செய்த வாலிபர் ெரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அந்த வாலிபா் தண்டவாளம் அருகே குப்பை கொட்டும் இடத்தில் கிடந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருவிடைமருதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த வாலிபர் நேற்று காலை உயிரிழந்தாா்.

விசாரணை

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ரெயிலில் இருந்து தவறி விழுந்து உயிாிழந்த வாலிபர் நன்னிலம் அருகே ஆண்டிப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என தெரியவந்தது. இது குறித்து திருவிடைமருதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story