தர்கா குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு


தர்கா குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு
x

நாகூர் தர்கா குளத்தில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்.

நாகப்பட்டினம்

நாகூர்:

கடலூர் முதுநகர் பச்சாங்குப்பம் போலாஷா தைக்கால் தெருவை சேர்ந்த முகமது அலி மகன் மன்சூர்அலி(வயது 19). இவர் நேற்று காலை தனது தாத்தாவுடன் நாகை மாவட்டம் நாகூரில் உள்ள ஆண்டவர் தர்காவிற்கு பிரார்த்தனை செய்வதற்காக வந்தார். தர்கா குளத்தில் மன்சூர் அலி குளித்தபோது தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த நாகை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து குளத்தில் இறங்கி தேடி மன்சூர் அலியின் உடலை மீட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த நாகூர் போலீசார், மன்சூர் அலி உடலை மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story