ஜவ்வாதுமலை குட்டூர் நீர்வீழ்ச்சியில் மூழ்கி வாலிபர் பலி


ஜவ்வாதுமலை குட்டூர் நீர்வீழ்ச்சியில் மூழ்கி வாலிபர் பலி
x

ஜவ்வாதுமலை குட்டூர் நீர்வீழ்ச்சியில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை

விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர் யாசின். அவரது மகன் ஹாரிப் (வயது 23). இவர், தனது உறவினர்களுடன் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த குட்டூர் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு வந்தார்.

பின்னர் ஹாரிப் நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தண்ணீரில் மூழ்கிய ஹாரிப்பை பிணமாக மீட்டனர். செங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story